Tamil Nadu

Nagapattinam

RBT/CC/143/2022

R Nagaraj - Complainant(s)

Versus

Sun Motors - Opp.Party(s)

M/s V manoharan

28 Feb 2023

ORDER

Date of Filing  

17.06.2019

Date of Reservation

17.02.2023

Date of Order

28.02.2023

 

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,

நாகப்பட்டினம்

 

முன்னிலை:

திரு. P. தட்சணாமூர்த்தி, B.A., B.L.,

  • தலைவர்

 

திரு. K.N. கமல்நாத்,  B.Sc., L.L.B.,

  • உறுப்பினர் I

 

திருமதி. M. சிவகாமி செல்வி, B.A., M.L.,

  • உறுப்பினர் II

 

நுகர்வோர் முறையீட்டு வழக்கு எண்: 143/2022

(Transferred as CC/139/2019  from DCDRC, Chennai (South))

2023-ஆம் ஆண்டு  பிப்ரவரி  மாதம்  28-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

 

R. நாகராஜ்,

த /பெ. ராஜன்,

எண்: 47, A  பிளாக்,

பச்சைக்கல் வீராசாமி தெரு,

அயனாவரம்,

சென்னை – 600023.                                                                     புகார்தாரர்

 

             -எதிர்-

 

  1. சன் மோட்டார்ஸ்,

அதற்காக அதன் நிர்வாக இயக்குனர்/  உரிமையாளர் / AP,

ஆஷாவிஹார்,

79/7, M  பிளாக்,

3-வது  பிரதான சாலை,

அண்ணா நகர்,

சென்னை-102.

 

  1. மண்டல  போக்குவரத்து அலுவலர்,

வடக்கு மேற்கு,

சென்னை – 102.

 

  1. மண்டல  போக்குவரத்து அலுவலர்,

சென்னை சென்ட்ரல்,

அயனாவரம்,

சென்னை - 25.

  1. தி ஓரியண்டல் இன்சூரன்ஸ்,

அதற்காக அதன் அதிகாரம் பெற்ற  நபர்,

புதிய எண்: 377,  அண்ணாசாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 15.            

 

  1. P. ஜைநேந்தர்,

த /பெ. பிரகாஷ் சந்த்,

எண் : 13/6, தாய்கிணறு தெரு,

வில்லிவாக்கம்,

சென்னை  - 49.                                                        எதிர்தரப்பினர்கள்

 

புகார்தாரர் தரப்பில் திரு. M/s. V. மனோகரன், வழக்கறிஞர் ஆஜராகியும்,               1-ம்  எதிர்தரப்பினர் தரப்பில் வழக்கறிஞர்  திரு. M/s. V.T. நரேந்திரன், அவர்கள் ஆஜராகியும், 4-ம்  எதிர்தரப்பினர் தரப்பில்  திரு. M/s. நாகேஸ்வரன், வழக்கறிஞர் அவர்கள் ஆஜராகியும், 2, 3, 5-ம்  எதிர்தரப்பினர்கள் 24.10.2019 அன்று தோன்றாத் தரப்பினர்கள் ஆக்கப்பட்டார்கள்.  இதுநாள் வரையில் இந்த ஆணையத்தின் பரிசீலனையிலிருந்து, இருதரப்பு சான்றாவணங்களையும், சாட்சிகளையும், இருதரப்பு வாதங்களையும்  கேட்டு அறிந்து  இன்று   28.02.2023 -ல்     இந்த ஆணையம் பிறப்பிக்கும்,

 

உத்தரவு

 

தலைவர் திரு. P. தட்சணாமூர்த்தி, B.A., B.L., அவர்களால் பிறப்பிக்கப்பட்டது

 

புகார்தாரர் மனுவின் சுருக்கம் :

 

புகார்தாரர் மோட்டார் சைக்கிள் வாங்க விரும்பினார். அதற்காக விலைப்புலியைகளை எதிர்தரப்பினர் கொடுத்தார். அதன்படி அவர் வாங்க விரும்பிய வண்டியின் விலையில் ரூ .40,600/-ஐ  ரொக்கமாகவும் ரூ.55,000/-ஐ  ஒரு தனியார் பைனான்ஸ் மூலம் ஏற்பாடு செய்து 1-ம் எதிர்தரப்பினரிடம் கொடுத்தார். ஆனால்  எதிர்தரப்பினர்களால் புகார்தாரருக்கு புதிய வண்டி வழங்கப்படவில்லை. ஏற்கனவே விற்பனை  செய்யப்பட்ட வண்டி தான்
 வழஙகப்பட்டது என்றும், உரிய நேரத்தில் மேற்படி வண்டியை பதிவு செய்து தரவில்லை. எனவே புகார்தாரர் பலமுறை நேரில் சென்றும் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பிய பிறகு 1, 2ம் எதிர்தரப்பினர் பொய்யான தகவலுடன் பதிலறிவிப்பு கொடுத்தார்கள் மற்ற எதிர்தரப்பினர் எந்தவித பதிலும் அனுப்பவில்லை. ஆகவே, இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தப் புகாரில் கோரியுள்ளபடி  எதிர்தரப்பினர்களுக்கு உத்தரவிட புகார்தாரர் வேண்டுகிறார்.

 

1- ம் எதிர்தரப்பினரின்  எதிருரையின்  சுருக்கம் :

  1-ம் எதிர்தரப்பினர் 2-ம் முறை விற்பனை செய்யும் வாகனங்களையும் விற்பனை செய்கிறார். புகார்தாரர் 2-ம் முறை வாகனம் அதாவது ஏற்கனவே உபயோகம் செய்யப்பட்ட வாகனத்தை தான் வாங்கினார். பெயர் மற்றும் விண்ணப்பங்களில் கையெழுத்திட்டுள்ளார். எனவே புகாரில் புகார்தாரர் கூறியுள்ள சங்கதிகள் பொய்யானவை. மேற்படி வண்டியை பதிவு செய்ய ஆன  காலதாமதம் BS III ஈசி  வாகனங்கள் பதிவு செய்வதை நிறுத்துதல் போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கை கொள்கை முடிவுகளால் தாமதம் ஆனது. புகார்தாரர் வாகனம் காணாமல் போனது பற்றி புகார்தாரருக்கு தெரிவிக்கப்படவில்லை. 4ம் எதிர்தரப்பினரிடமிருந்து புகார்தாரர் வாகனத்தை ரூ.15,000/- கழிவு செய்து கொண்டு பெற்றுக் கொண்டார். புகார்தாரர் உண்மையான சங்கதிகளை மறைத்து விட்டார். எனவே, 1-ம் எதிர்தரப்பினருக்கு   எதிரான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டுமாய் பிரார்த்திக்கின்றனர்.

 

4-ம் எதிர்தரப்பினர்களின்  எதிருரையின்  சுருக்கம் :

 

புகார்தாரர் வாங்க விரும்பிய வண்டி புகார்தாரர் குறிப்பிட்டுள்ள தேதியில் விற்பனை செய்யப்படவில்லை. மேற்படி வண்டியின் உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். புகார்தாரர் வாங்க விரும்பிய வாகனம் பழைய வாகனம் அதை மற்றொருவரிடம் இருந்து வாங்கினார். அதற்காகத் தான் மாற்று சான்று விண்ணப்பத்தில் கையெழுத்து செய்துள்ளார். புகார்தாரரின் வாகனம் திருடு போனது பற்றி உரிய முறையில் 4-ம் எதிர்தரப்பினரிடம் தெரிவிக்கவில்லை. வாகனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டதால்தான் 4-ம் எதிர்தரப்பினரிடம் வேண்டியதன் பேரில் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.   எனவே காப்பீட்டு நிறுவனத்தின் தரப்பில் எந்தவிதமான சேவை குறைபாடும் இல்லை. எனவே, புகாரை தள்ளுபடி செய்ய வேண்டுமாய் பிரார்த்திக்கின்றனர்.

 

2, 3, 5-ம்  எதிர்தரப்பினர்கள் 24.10.2019 அன்று தோன்றாத் தரப்பினர்கள் ஆக்கப்பட்டார்கள்.  

இந்த புகாரில் எழுந்துள்ள எழுவினாக்கள்:

 

  1. புகார்தாரருக்கு எதிர்தரப்பினர்கள் காப்பீட்டு தொகை செலுத்த  கடமைப்பட்டவர்களா?

 

  1. புகார்தாரருக்கு எதிர்தரப்பினர்கள் சேவை குறைபாடு புரிந்துள்ளனரா?

 

எழுவினா  1 மற்றும் 2-க்கான பதில்:

 

       புகார்தாரர் தன்னுடைய புகாரில் கண்டுள்ள சங்கதிகளை மெய்ப்பிப்பதற்கு 14 ஆவணங்களை தாக்கல் செய்து குறியீடு செய்துள்ளார். எனவே அவரது சங்கதிகள் ஒவ்வொன்றும் ஆவணகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1-ம் எதிர்தரப்பினரும் 4-ம் எதிர்தரப்பினரும் எதிருரை  தாக்கல் செய்து, நிரூபண வாக்கு மூலம் தாக்கல் செய்திருந்தாலும் அவர்களது தரப்பில் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று 2,3,5 எதிர்த்தபிறினார்கள் ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு பதிலுரையோ வேறு எந்த ஆவணங்களோ தாக்கல் செய்யவில்லை. ஆகவே, 1, 2, 3, 4 மற்றும் 5-ம் எதிர்தரப்பினர்கள் உரிய முறையில் ஆவணங்கள் தாக்கல் செய்யாத காரணத்தால் அவர்கள் தரப்பில் அவர்கள் கூறிய சங்கதிகள் நிரூபிக்கப்பட்டதாக இந்த ஆணையம் கருதவில்லை. எனவே, புகார்தாரர் புகாரில் கூறியுள்ள சங்கதிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே எழுவினா 1 மற்றும் 2டிற்கு புகார்தாரருக்கு சாதகமாக விடை காணப்படுகிறது. இறுதியாக,

           உத்தரவு பகரப்பட்டது

 

  1. புகார்தாரருக்கு,  மன உளைச்சல், அலைச்சல் ஏற்படுத்தியமைக்காக                 1 முதல் 5 வரையுள்ள எதிர்தரப்பினர்கள் கூட்டாகவோ தனித்தனியாகவோ,   ரூ. 50,000/- (ரூபாய் ஐம்தாயிரம் மட்டும்) செலுத்தி வைக்க வேண்டும் என்றும்,
  2. புகார்தாரருக்கு  ஏற்பட்ட  இந்த  வழக்கு  செலவுத்  தொகைகளுக்காக      1 முதல் 5 வரையுள்ள எதிர்தரப்பினர்கள் கூட்டாகவோ தனித்தனியாகவோ   ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்)  செலுத்தி வைக்க வேண்டும் என்றும்,

 

மேற்கண்ட  அனைத்து  தொகைகளையும்  இந்த உத்தரவு பகிரப்பட்ட இரண்டு மாத  காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் புகார் கோப்பில் எடுக்கப்பட்ட தேதி முதல் மேற்கண்ட அனைத்து தொகைகளுக்கும் ஆண்டொன்றிற்கு ரூ.100/- க்கு (ரூபாய் ஒரு நூறு மட்டும்) 12% வட்டி கணக்கிட்டு அனைத்து தொகைகளை செலுத்தி முடிக்கும் வரை செலுத்த வேண்டும் என்று இந்த ஆணையம் உத்தரவிடுகிறது.

 

தலைவர் அவர்களால் சொல்லப்பட்டு,  சுருக்கெழுத்து தட்டச்சரால் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டதை, தலைவரால் திருத்தம் செய்யப்பட்டு, எங்களால் இன்று 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதம் 28-ஆம் நாள்                    செவ்வாய்க்கிழமை   திறந்த ஆணையத்தில் பகரப்பட்டது.

 

     ஒம் /-                                             ஒம் /-                                       ஒம் /-  

உறுப்பினர் -I                     உறுப்பினர் –II                           தலைவர்

 

புகார்தாரர்  தரப்பில்  தாக்கல் செய்த ஆவணங்கள்

 

. எண்   

தேதி

விபரம் 

தன்மை

1

27.02.2017

Gate Pass given by the

Oppoiste party No: 1

நகல்

2

20.03.2017

Finance given by Capital First

நகல்

3

29.03.2017

Tax Invoice given by the Oppoiste party No: 1

நகல்

4

10.09.2016

Policy in favour of Oppoiste party No: 5 by Oppoiste party No: 4

நகல்

5

29.03.2017

Policy in favour of Complainant issued by Oppoiste party No: 4

நகல்

6

_

RC Book of the vehicle TN02-BJ-0214

நகல்

7

04.09.2017

Legal Notice issued by the Complainant to the Opposite parties, Postal receipt & Acknowledgements.

நகல்

8

19.09.2017

Reply given by the Opposite party No: 1

நகல்

9

22.09.2017

Reply given by the Opposite party No: 2

நகல்

10

04.10.2017

Rejoinder given by the Complainant to Opposite party No: 1

நகல்

11

04.10.2017

Rejoinder given by the Complainant to Opposite party No: 2

நகல்

12

10.10.2017

Complaint given by the Complainant before K-4 Police Station

நகல்

13

13.03.2018

Order in Crl. M.P. No: 3312/2018

நகல்

14

17.07.2018

Copy of the FIR No: 607/2018

நகல்

 

 

 

 

 

எதிர்தரப்பினர்கள்  தரப்பில் ஆவணங்கள்  எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை

 

     ஒம் /-                                              ஒம் /-                                      ஒம் /-

உறுப்பினர் -I                       உறுப்பினர் –II                           தலைவர்

Consumer Court Lawyer

Best Law Firm for all your Consumer Court related cases.

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!
5.0 (615)

Bhanu Pratap

Featured Recomended
Highly recommended!

Experties

Consumer Court | Cheque Bounce | Civil Cases | Criminal Cases | Matrimonial Disputes

Phone Number

7982270319

Dedicated team of best lawyers for all your legal queries. Our lawyers can help you for you Consumer Court related cases at very affordable fee.